இந்தியா Covid-19

ஊரடங்கை மீறிய தந்தையை போலீசாரிடம் சிக்க வைத்த மகன்.. டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!

Summary:

Man filed complaint against father

டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறி தினமும் வெளியில் சென்று வந்த தந்தையை குறித்து மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 24 ஆம் தேதி அறிவித்தார். இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை தவிர மற்றவை அனைத்தும் நிறுத்தப்படுள்ளன. மக்களும் தேவையின்றி வெளியில் செல்ல கூடாது என்றும் உத்தரவு பிறப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியின் வசந்த் குஞ் காவல் நிலையத்தில் அபிஷேக் என்பவர் தனது தந்தை விரேந்தர் சிங் (59) ஊரடங்கு உத்தரவை மீறி தினமும் வெளியில் சுற்றி திரிவதாக கடந்த புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.


Advertisement