ஒரே நாளில் கோடீஷ்வரரான 24 வயது இளைஞர்! எப்படி தெரியுமா?
ஒரே நாளில் கோடீஷ்வரரான 24 வயது இளைஞர்! எப்படி தெரியுமா?

கார்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் முகமது பயஸ். 24 வயதான இவர் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாபியில் நடக்கும் பிக் டிக்கெட் என கூறப்படும் லாட்டரி சீட்டினை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், இந்த லாட்டரி டிக்கெட்டின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில், முகமது பயஸ் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 12 மில்லியன் திர்ஹம் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 23 கோடி.
இதுகுறித்து முகமது பயஸ் கூறுகையில் இந்த பணத்தை வைத்து தாங்கள் விற்ற நிலத்தை மீண்டும் வாங்கவேண்டும் என்றும், தனது சகோதர - சகோதரிகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், தான் இதுவரை அபுதாபி சென்றது இல்லை என்றும், பரிசு தொகையை பெறுவதற்காக முதல் முறை அபுதாபி செல்வதாகவும் மகிழ்வுடன் கூறியுள்ளார் முகமது பயஸ்.