மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
நிச்சயத்திற்கு பின் தெரியவந்த பகீர் உண்மை! ஆசிட் வீசி கொன்றுவிடுவதாக மிரட்டிய மாப்பிள்ளை!!
ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் வசித்து வந்த 26 வயது பெண் போரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றிவந்த வில்லான்டர் பெனட்ராயன் என்ற 29 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், பெனட்ராயன் திருமண செலவுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி அந்தப் பெண்ணிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மூன்றரை லட்சம் வரை பெற்றுள்ளார். இந்த நிலையில் பெனட்ராயனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பது நண்பர்கள் மூலம் அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு பிறகு 1 லட்சத்தை மட்டும் அவர் திரும்பிக்கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது பெனட்ராயன், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உன்னை ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன் என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார். அதன் விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.