இளம்பெண்ணின் உயிருக்கு உலைவைத்த மட்டன்! உயிருடன் எரித்த கணவன்! அதிர்ச்சி சம்பவம்!



Man burns wife alive for serving less quantity of mutton during dinner

பொதுவாக கணவன் - மனைவிக்குள் சில சமயங்களில் சிறு சிறு பிரச்சனைக்கெல்லாம் சண்டை வருவது வழக்கமான ஓன்று. அந்த வகையில், தான் சாப்பிடும்போது தனக்கு மட்டன் குறைவாக வைத்ததாக மும்பையை சேர்ந்த கணவன் ஒருவர் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள ஜீயி கோமதே என்ற கிராமத்தில் வசித்துவருபவர்கள் மாருதி சரோத் அவரின் மனைவி பல்லவி சரோத். இருவரும் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

Crime

இந்நிலையில் இரவு சாப்பாட்டிற்காக அனைவரும் அமர, பல்லவி அனைவருக்கும் சாப்பாடு பரிமாறியுள்ளார். ஏதோ காரணத்திற்காக பல்லவி தனது கணவனுக்கு குறைந்த அளவில் மட்டன் வைத்துள்ளார். தனக்கு எப்படி குறைந்த அளவு மட்டன் வைக்கலாம் என ஆத்திரம் அடைந்த பல்லவியின் கணவர் அருகில் இருந்த மண்ணெணெய்யை மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த நிலையில் பல்லவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குறைந்த அளவு மட்டன் வைத்ததற்காக கணவன் மனைவியை கொலை செய்ய துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.