6 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.! நிர்வாணப்படுத்தி வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.!



man abused young girl

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டஹே சேர்ந்த 6 வயது சிறுமி. கடந்த திங்கள் கிழமை மாலை அவரது வீட்டின் முன்பு தனது சகோதரியுடன் விளையாடியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 45 வயது நிரம்பிய ஸ்ரீதர் என்பர் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து தூக்கிச்சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமியை காணாததால் பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.

இந்தநிலையில், பெற்றோர் சிறுமியின் சகோதரியிடம் காணாமல் போன சிறுமி குறித்து கேட்டுள்ளனர். இதனையடுத்து அவர், பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்ரீதர் தான் தங்கையை தூக்கி இந்த பக்கமாக சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற உறவினர்கள் சென்று பார்த போது பதுங்கியிருந்த ஸ்ரீதரை உறவினர்கள் பிடித்தனர்.

மேலும் அருகே இருந்த புதரில் சிறுமி அதிக ரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்ட உறவினர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.மேலும் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரீதரை சாலையில் அடித்து தரதரவென இழுத்துச்சென்று, ஆடைகளை களைந்து ஸ்ரீதரை நிர்வாணமாக்கி ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர்.