தாயின் இறுதி சடங்கை வீடியோவில் பார்த்துக்கொண்டே மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியா்.! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

தாயின் இறுதி சடங்கை வீடியோவில் பார்த்துக்கொண்டே மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியா்.! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!


Male nurse attend corono patients without participating mother funeral

தன்னை பெற்ற தாய் இறந்தநிலையிலும் கூட அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளாமல் அவரது மகன் மருத்துவப்பணியாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கொரோனாவால் உலகமே போராடிவரும் நிலையில், ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் ஆண் செவிலியராக பணியாற்றிவருகிறார் ராமமூர்த்தி மீனா. இவர் பணியாற்றும் வார்டில் இத்தாலி நாட்டை சேர்ந்த கொரோனா நோயாளிகள் உட்பட 103 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கடந்த 1 மாதமாக தனது குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்காமல் மருத்துவமனையிலையே தங்கி பணியாற்றிவந்துள்ளார் ராமமூர்த்தி மீனா. இந்நிலையில்தான் ராமமூா்த்தியின் தாயாா் போளிதேவி (93) காலமாகிவிட்டதாக ராமமூா்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.

corono

விஷயம் அறிந்ததும் தனது சகோதர்களுக்கு போன் செய்து தாயாரின் இறுதி சடங்கை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு, தாய் இறந்த சோகத்தை அடக்கிக்கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவப்பணியாற்றியுள்ளார் ராமமூா்த்தி.

இந்த தகவல் எப்படியோ வெளியேவர, ஏன் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என ராமமூர்த்தியிடம் கேட்டுள்ளனர். அதற்கு, நாடு இருக்கும் சூழலில் நாம் அனைவரும் கொரோனாவை எதிா்த்து போராட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். நான் பணியாற்றும் வார்டில் பலர் உயிருக்காக போராடிவருகின்றனர்.

எனது தாய் இறந்து போனது மிகவும் துக்கமான விஷயம்தான். அதேநேரம், உயிருக்குங்க போராடும் இவர்களை கவனித்துக்கொள்ளவேண்டியதும் மிக அவசியமான ஓன்று. அதனால்தான் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என ராமமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும், தாயின் இறுதி சடங்கு நிகழ்வுகளை அவரது சகோதரர்கள் வீடியோ பதிவு செய்து அனுப்ப, அந்த வீடியோ மூலம் தாயின் இறுதி சடங்கை பார்த்துள்ளார் ராமமூர்த்தி. ராமமூர்த்தியின் இந்த செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.