சீரம் நிறுவன இயக்குனரிடம் தலைமை அதிகாரி பெயரில் ரூ.1 கோடி மோசடி : நூதன கும்பல் கைவரிசை..!
சீரம் நிறுவன இயக்குனரிடம் தலைமை அதிகாரி பெயரில் ரூ.1 கோடி மோசடி : நூதன கும்பல் கைவரிசை..!

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்து விநியோகித்து வரும் சீரம் நிறுவன அதிகாரிகளின் பெயரில் நடந்த பகல் மோசடி குறித்த செய்தியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில், கோவிட்ஷீல்டு தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் இயக்குனரின் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டே வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா பெயரில் வாட்சப் தகவல் வந்துள்ளது.
அதில், தனக்கு அவசரமாக ரூ.1 கோடியே 1 இலட்சத்து ஆயிரத்து 554 தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் பூனவாலாவின் புகைப்படமும் இருந்ததால், பணம் கேட்டதாக நினைத்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் மூலமாக பணமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பணம் அனுப்பிய பின்பு போனில் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவிக்கவே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சதீஷ் பாண்டே புனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மோசடி கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.