கார் - தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து; 6 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் மாவட்டம், கன்பா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காரும் - தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதுகுறித்து நகும்பிடா காவல் துறையினர் விசர்நாய் நடத்தி வருகின்றனர்.