புள்ளி பாய் ஆப் போல, சுள்ளி டீல்ஸ் ஆப் விவகாரம்... பட்டதாரி வாலிபர் பரபரப்பு கைது.!



Madhya Pradesh Indore Youngster Arrested by Police about Sulli Deals App Case

கடந்த வருடத்தின் ஜூலை மாதம் சுள்ளி டீல்ஸ் என்ற செயலியில், 100 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படத்தை இழிவாக சித்தரித்து இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இவ்வழக்கு தொடர்பான விசாரணையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சார்ந்த ஓம்காரேஸ்வர் தாகூர் என்ற 26 வயது இளைஞரை டெல்லி காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இவர் பி.சி.ஏ பட்டதாரி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரியில் ட்விட்டர் மூலமாக குழுவில் இணைந்த நிலையில், அதில் முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்தும் யோசனை பகிரப்பட்டுள்ளது.

Madhya pradesh

இதன்பின்னரே சுள்ளி டீல்ஸ் என்ற செயலி உருவாக்கப்பட்டு, முஸ்லீம் பெண்களின் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து பதிவேற்றியதும் அம்பலமானது. சுள்ளி டீல்ஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார். சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புள்ளி பாய் ஆப் விவகாரத்தில் அசாம் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கைதும் நடந்துள்ளது.