Video : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அலங்கார காணொளி வைரல்!!!
பேரதிர்ச்சி..! 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி! திடீரென வயிறு வலியால் துடிதுடித்த மாணவிக்கு பள்ளியிலே பிறந்த ஆண் குழந்தை! பெரும் பரபரப்பு சம்பவம் !!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் கல்வி மற்றும் சமூக வட்டாரங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி, தேர்வு மையத்திலேயே ஆண் குழந்தைக்கு பிறந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தேர்வு மையத்தில் திடீர் பிரசவம்
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. காலை 9 மணியளவில் தேர்வு தொடங்கி அமைதியாக நடைபெற்று வந்தது. சுமார் 10 மணியளவில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
வலியால் அவதிப்பட்ட மாணவி உடனடியாக கழிவறைக்குச் சென்றார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பரிசோதித்தபோது, அது சாதாரண வயிற்று வலி அல்ல, பிரசவ வலி என தெரியவந்தது.
இதையும் படிங்க: வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி! ஹாஸ்பிடலுக்கு போனதும் காத்திருந்து பேரதிர்ச்சி! வாலிபரை வலைவீசி தேடும் போலீஸ்...
சுகாதாரத் துறையின் உடனடி நடவடிக்கை
சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் மாணவிக்கு தேர்வு மையத்திலேயே பாதுகாப்பான முறையில் பிரசவம் நடத்தப்பட்டது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரணை தீவிரம்
இந்த சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 மே மாதத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தூரைச் சேர்ந்த இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞர் மாணவியை பலாத்காரம் செய்ததாகவும், அதன் விளைவாக அவர் கர்ப்பமாகியதாகவும் போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாணவிக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றிருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு இந்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு மையத்தில் மாணவி குழந்தை பெற்றெடுத்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: கல்குவாரியில் கிடந்த 10-ம் வகுப்பு மாணவி சடலம்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த அடுத்தடுத்த அதிர்ச்சி! DNA பரிசோதனை மூலம் திடுக்கிடும் உண்மை!