லாட்டரிச்சீட்டு வாங்க வற்புறுத்திய மனைவி! வேண்டா வெறுப்பாக வாங்கிய கணவனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையை சேர்ந்தவர் சிவன். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்துவந்துள்ளார். இவருக்கும் ஓமணா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி உள்ளது.
சமீபத்தில் சிவன் தனது மனைவியுடன் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்தபோது அந்த பகுதியில் ஒருவர் லாட்டரிச்சீட்டு விற்றுக் கொண்டிருந்தார்.
லாட்டரிச்சீட்டு விற்பவர் தான் ஒரு இதய நோயாளி என்றும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும், இதனால் தனக்கு உதவுவதற்காக லாட்டரிச்சீட்டு வாங்கும்படி கேட்டுள்ளார்.

ஆனால் லாட்டரிச்சீட்டு வாங்க விருப்பமின்றி சிவன் அவரை கடந்து சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவி லாட்டரிச்சீட்டு விற்பவர் மீது இரக்கம் ஏற்பட்டதால் கணவரிடம் கூறி லாட்டரிச்சீட்டு வாங்கும் வற்புறுத்தியுள்ளார். இதனால் மனைவியின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக லாட்டரிச்சீட்டு வாங்கியுள்ளார் சிவன்.
இந்தநிலையில் லாட்டரிச்சீட்டுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சிவன் வாங்கிய சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்து, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சிவன் கூறுகையில், ஏழை கட்டிட தொழிலாளியான எனக்கு பணத்தை வீணாக செலவு செய்வதில் விருப்பம் கிடையாது. இதனால் தனக்கு கிடைத்த பரிசின் மூலம் பெரிய வீடு ஒன்று கட்டி எனது கடன்கள் முழுவதையும் அடைப்பேன் என கூறியுள்ளார்.