புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம்!. தற்போதைய நிலவரம்!. உயிரிழப்புகளின் எண்ணிக்கை!.
கேரளாவில் வரலாறு காணாத பெய்த கனமழையால் வெள்ளத்தால் மாநிலமே இருளில் மூழ்கி தத்தளித்து வந்தது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் 5,645 முகாம்களில் 12.47 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32 பேரை காணவில்லை எனவும் 776 கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
மேலும் சில இடங்களில் வெள்ளநீர் வற்றி உள்ளது. மழை தற்போது குறைந்துள்ளதால் மீட்பு பணிகளில் முப்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் உள்ள தண்ணீர் வெளியேறி வருவதால் வீட்டிற்குள் பாம்பு போன்ற உயிரினங்களும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது கேரளாவில் மழை குறைந்துள்ளதால் நீர்கள் வற்றி, இயல்பு வாழ்கை மெல்ல திரும்பி வருகிறது. இன்னும் பல குடும்பங்கள் உறவினர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை என கூறிவருகின்றனர்.