இந்தியா

திருமணமான சில மாதத்திலேயே புதுமணப்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்! வருத்தத்தில் குடும்பத்தினர்!

Summary:

Lisha

வட இந்தியாவில் உள்ள பலாசூர் நகரை சேர்ந்த இளம்பெண் லிசா மிதா. இவர் அதே பகுதியை சேர்ந்த சுஷாந்த் என்ற இளைஞரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில் திடீரென உடல்நல கோளாறு காரணமாக லிசாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக லிசாவின் பெற்றோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து மருத்துவமனைக்கு வந்துள்ளனர் லிசாவின் பெற்றோர்.

ஆனால் அங்கு லிசாவின் உடல் நிலை மிக மோசமானதால் அவரை உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு லிசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் கோபமான லிசாவின் பெற்றோர் மணமகன் குடும்பத்தின் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீசாரிடம் அவர்கள் திருமணத்தின் போது லிசாவுக்கு வரதட்சணையாக பணம், நகை அனைத்து போட்டுள்ளோம்.

இருந்தாலும் லிசாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 80,000 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டு லிசாவை கொடுமைப்படுத்தியுள்ளதாக லிசாவின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் அதே சமயத்தில் தான் என் மகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறியுள்ளனர் லிசாவின் பெற்றோர்.

இதனால் தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் லிசாவின் பெற்றோர். 


Advertisement