இந்தியா

மின் விளக்குகளால் ஒளிரும் படேலின் சிலை; லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Summary:

latest images of patel statue

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடி அறிவித்த முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை நிறுவுவது. அதன்படி அப்போதே அதற்கான வேலைகள் துவங்கப்பட்டன. 

அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் படேலின் பிறந்த நாளான நாளை அக்டோபர் 31ஆம் தேதி பட்டேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். உலகின் மிகவும் உயரமான இந்த சிலை ஒற்றுமையை உணர்த்தும் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.   

குஜராத்தில் நர்மதை ஆற்றின் நடுவே 597 அடி உயரத்தில் இந்த வல்லபாய் படேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. அந்த சிலையின் புகைப்படங்கள் இப்பொது வெளியாகியுள்ளன.


Advertisement