பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
நிலத்தைப் பார்த்தாலே பயம்! கடலிலே வாழ்க்கை, வீடாகும் மரப்படகுகள்! கடலிலே இறக்கும் அதிசய பழங்குடியினரின் வினோத தகவல்!

உலகம் முழுவதும் பழங்குடியினர்கள் தங்களது மரபுகளை தொடர்ந்தும் பாதுகாத்து வாழ்ந்து வருகின்றனர். நவீன நாகரிகத்தில் கலந்து கொள்ளாமல், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை பின்பற்றுகின்ற இவர்கள் பலதரப்பட்ட வாழ்க்கை முறை கொண்டவர்கள்.
தென்கிழக்கு ஆசிய கடற்கரைகளில் வாழும் பஜாவ் மக்கள்
இந்தோனேஷியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பஜாவ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நிலத்தில் வாழ்வதைவிட, இவர்களின் பெரும்பாலான வாழ்க்கை கடலிலேயே நடைபெறுகிறது.
அசாதாரண டைவிங் திறன் கொண்டவர்கள்
பஜாவ் இனத்தவரின் தனித்துவமான திறமை அவர்களின் டைவிங் திறனே ஆகும். எந்தவிதமான நவீன உபகரணமும் இல்லாமல், இந்த மக்கள் கடலுக்குள் 5 முதல் 15 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து நீந்தக்கூடிய திறன் பெற்றவர்கள்.
இதையும் படிங்க: ஜூலை மாதம் இந்த தேதியில் பெரிய பேரழிவு ஏற்படுபோகுதாம்! இன்றுவரை 100% துல்லியமாக நடந்துள்ள ரியோ டாட்சுகி கணிப்புகள்!
ஆழம்கடக்கும் டைவிங் திறனுக்கு காரணம்
பஜாவ் மக்கள், சாதாரண நபர்களை விட 50% பெரிய மண்ணீரலை கொண்டிருப்பதால், அவர்கள் கடலின் 20-30 மீட்டர் ஆழம் வரை டைவ் செய்யும் திறன் பெற்றுள்ளனர். இது மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கை திறன் என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
கடலே வாழ்க்கை என்றும் நம்பும் பாரம்பரியம்
இவர்கள் சிறு வயதிலேயே நீச்சல் மற்றும் டைவிங் பயிற்சி பெறுகிறார்கள். கடலே இவர்களின் வாழ்வாதாரம். மரத்தால் தயாரிக்கப்படும் பாரம்பரிய கண்ணாடிகள், கைவினை ஈட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தி, மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களை வேட்டையாடுகிறார்கள்.
வீடாகும் மரப்படகுகள்
பஜாவ் மக்கள் “லெபா லெபா” எனப்படும் மரப்படகுகளை வீடாகவும் வாழ்விடமாகவும் பயன்படுத்துகிறார்கள். பருவ மாற்றங்களுக்கேற்ப, தீவுகளுக்கிடையே இடமாற்றமும் செய்கிறார்கள். இவர்கள் முழுமையாக மீன்பிடித்தலையே நம்பி வாழும் தனித்துவ இனக்குழுவாகவும் திகழ்கின்றனர்.
இதையும் படிங்க: உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! 3600°C வரை வெப்பத்தை தாங்கும் செராமிக்!