கேரளாவை உலுக்கும் மனைவி பரிமாற்ற விவகாரம்.. கணவனின் கொடுமையால் விவாகரத்து, தற்கொலை..! அதிர்ச்சி தகவல்கள்.!!

கேரளாவை உலுக்கும் மனைவி பரிமாற்ற விவகாரம்.. கணவனின் கொடுமையால் விவாகரத்து, தற்கொலை..! அதிர்ச்சி தகவல்கள்.!!



Kerala Wife Swap Case Update

கேரள மாநிலத்தில் மனைவிகளை மாற்றும் குழு கடந்த 3 வருடத்திற்கும் மேலாக செயல்பட்டு வருவதாக தெரியவந்த நிலையில், பெண்மணி ஒருவர் கணவரின் மீது அளித்த புகார் கேரளாவை மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணையில் பல அதிர்ச்சி திருப்பமும் நடந்து வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கணவரின் மீது 2 வருடத்திற்கு முன்னதாக புகார் அளித்த நிலையில், புகாரை ஏற்ற காவல் துறையினர் உரிய வகையில் விசாரணை செய்யவில்லை. மேலும், அதனை அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எந்த கணவராவது இப்படி செய்வாரா? என பேசி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து புகார் வந்ததால், பின்னணி விசாரணை செய்யப்பட்டுள்ளது. 

விசாரணையின் போது பல முக்கிய பிரமுகர்களின் பெயரும் அடிபட்ட காரணத்தால், காவல் துறையினர் புகாரை முடித்து வைக்க ஆர்வமாக செயல்பட்டுள்ளனர். தற்போது விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ள காரணத்தால், மனைவியை மாற்றும் குழுவில் இருந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் விசாரணையில் சிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. குழுவில் இணைந்த நபர்கள் குழுவில் இருந்து வெளியேறாமல் இருக்க ரகசிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதல் முறையாக உறுப்பினராக சேரும் நபர், மனைவியுடன் விருதுக்கு அழைக்கப்ட்டுள்ளார். அங்கு பிற உறுப்பினர்களின் மனைவிகள் அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களுடன் பழக நேரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினருடன் நெருங்கி பழகும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. 

புதிய உறுப்பினரின் மனைவிக்கும் கணவனின் நண்பர் என்பவன் அறிமுகப்படுத்தப்பட்டு, அவருடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மனைவி கண்முன்னே பிற பெண்களுடன் நெருக்கமாக இருப்பது, மனைவிகள் மற்றொரு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்றவை அவர்களுக்கு தெரியாமல் படம்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், குழுவில் இருந்து விலக நினைத்தால், விடியோவை காண்பித்து மிரட்ட தொடங்கியுள்ளனர். பல பெண்களும் வீடியோ வெளியாகிவிடும் என்ற பயத்தால் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். மேலும், சில நொந்துபோன பெண்கள் கணவனின் கொடுமைக்கு பணிந்து சென்று, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே கணவனின் கொடுமையால் பிரிந்துவிட்டனர். மேலும், சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது.

KERALA

முதலில் ஆர்வத்துடன் பெண்கள் சேர்ந்தாலும், பலரும் தங்களை உல்லாசத்திற்கு அழைப்பதால் மனம் வெறுத்து இருக்கின்றனர். மேலும், இதே நிலை நீடித்தால் விபச்சாரி நிலைக்கு உள்ளாக்கப்படுவோம் என்று எண்ணி கணவரை பிரிந்து சென்றுள்ளனர். இன்னும் சிலரோ கணவரை விட அவரது நண்பர்கள் சிறந்தவர் என அவருடன் வாழ தொடங்கி, பின்னாளில் அவர்களுக்கு குறிப்பிட்ட பெண்ணின் மீதுள்ள மோகம் குறைந்து, அவர்களை வீதியில் நிறுத்திய கொடுமையும் அரங்கேறியுள்ளது.

மேலைநாட்டு கலாச்சாரம், புரட்சி என்ற பெயரில் அப்பாவி பெண்களின் மனதை மாற்றி, அவர்களை போகப்பொருளாக உபயோகம் செய்யும் கும்பலின் அட்டகாசம் தமிழகத்திலும் இருக்கிறது. அவை திரைமறைவில் நடந்து வரும் நிலையில், கேரளாவை போன்றதொரு பெரும் சர்ச்சையை சந்திப்பதற்கு முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு குரல். இவர்களின் புரட்சியெல்லாம் குடும்ப வாழ்க்கை முறைகளை சீரழிக்க மட்டுமே என்றால், அது அவர்களின் மறைமுக வியாபார யுக்தியே. இன்னும் சில வருடங்களில் அவை தார்மீகமாக உறுதி செய்யப்படும். எவனோ/எவளோ ஒருவரின் வார்த்தையை நம்பி, ஆணும் - பெண்ணும் தங்களின் வாழ்க்கையை இழக்க வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள்.