அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஒரே சிக்னல் பிரச்சினை! வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து ஆன்லைனில் படித்த இளம்பெண்! பின் நடந்த ஆச்சர்யம்!
கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே அரீக்கல் என்னும் பகுதியில் வசித்து வருபவர் நமீதா நாராயணன். இவர் குட்டுபுரத்திலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA ஆங்கிலம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டநிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு தங்களது பாடங்களை கற்று வருகிறார்.
இந்நிலையில் நமிதா நாராயணனும் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வந்துள்ளார். ஆனால் அவரது வீட்டின் உள்ளே எங்கேயும் சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில் எப்படியாவது படிக்க வேண்டும் என எண்ணிய அவர் தனது வீட்டின் மேற்கூரையில் ஏறி ஆன்லைன் வகுப்பை கவனித்துள்ளார்.

இதுகுறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பல ஊடகங்களிலும் வெளியானதை தொடர்ந்து, தனியார் இன்டர்நெட் சேவை நிறுவனம் ஒன்று நமிதாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு வீட்டிற்குள்ளேயே சிக்னல் கிடைக்கும் வகையில் அதிவேக இன்டர்நெட் சேவையை அளித்து உதவி செய்துள்ளது.
இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனக்கிருந்த பல தடைகளையும் தாண்டி எப்படியாவது படிக்க வேண்டும் என எண்ணிய நமீதா நாராயணனுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.