ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"76 வயதிலும் குரூரம்..." அமைச்சர் மருமகள் படுகொலை.!! பின்னணியில் கணவர்.!!
கேரள மாநிலத்தில் அமைச்சரின் மருமகளும் அவரது கணவரும் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அதிர்ச்சியளிக்கும் உண்மையை உலகிற்கு கொண்டு வந்திருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் சசிதரன். இவரது சகோதரியின் மகளான ஸ்ரீலேகா(67) தனது கணவர் பிரேமராஜனுடன்(76) சிரக்கல் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை நேரத்தில் இருவரையும் விமான நிலையம் அழைத்துச் செல்வதற்காக டிரைவர் வந்திருக்கிறார். நீண்ட நேரம் அழைத்தும் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீலேகாவும் அவரது கணவர் பிரேம ராஜனும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் ஆய்வு செய்தபோது, ஸ்ரீலேகாவின் தலையில் தாக்கப்பட்டதற்கான காயம் இருந்தது. மேலும் வீட்டில் ரத்தக்கரை படிந்த சுத்தியலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் போஸ்ட்மார்டம் முடிந்த பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: துயரத்தில் முடிந்த சந்திப்பு... காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்.!!
இந்நிலையில் இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீலேகா சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கணவர் பிரேமராஜன், தனது மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு அவரது உடலை எரித்த பின்பு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. எனினும் இதற்குப் பின்பு வேறு ஏதேனும் சதி இருக்கிறதா.? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மருமகள் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!