தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!
கேரள மாநிலம் காசர்கோடை சேர்ந்த விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இறந்த உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் காசர்கோடு பரக்கலை பகுதியைச் சேர்ந்தவர் கோபி(58). விவசாயியான இவருக்கு திருமணமாகி இந்திரா(54) என்ற மனைவியும் ரஞ்சேஷ் (34) மற்றும் ராகேஷ்(27) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது 4 பேரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் கோபி, இந்திரா மற்றும் ரஞ்சேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் மயக்க நிலையில் உயிருக்கு போராடிய ராகேஷை மீட்ட காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சேலம்: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! விசாரணையில் வெளியான உண்மை.!!
இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த துயர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் முதற் கட்ட விசாரணையில் அதிகமான கடன் சுமையால் கோபி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: துயரத்தில் முடிந்த சந்திப்பு... காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்.!!