அருவியில் குளிக்க சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பிணமாக மீட்பு..!

அருவியில் குளிக்க சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பிணமாக மீட்பு..!



Kerala Idukki Rajakkadu Falls 3 North Indian Workers Died

அருவிக்கு குளிக்க சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள், 200 அடி பள்ளத்தில் பாறைக்கிடையே சிக்கி பிணமாக மீட்கப்பட்ட சோகம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி, ராஜா காடு குத்துக்கல் பகுதியில் தனியார் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த துலீப் (வயது 20), ரோஷினி (வயது 20), அஜய் (வயது 21) ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். 

இவர்கள் மூவரும் கடந்த 1 ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் அருவியில் குளிக்க சென்ற நிலையில், மீண்டும் அவர்கள் தங்குமிடத்திற்கு வரவில்லை. இதுகுறித்து சக தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

KERALA

புகாரை ஏற்ற காவல் துறையினர் 3 பேரையும் தேடி வந்த நிலையில், 3 பேர் அருவிக்கு அருகே இறந்து கிடப்பதாக உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நெடுங்கண்டம் தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர்.

விசாரணையில், இவர்கள் 3 பேரும் மாயமான ஏலக்காய் தோட்ட பணியாளர்கள் என்பது உறுதியானது. மூவரின் உடலும் 200 அடி பள்ளத்தில், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் கால் இடறி விழுந்து 3 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த காவல் துறையினர் விசாரணை நடந்து வருகிறது.