யாரையும் அரசு காப்பாற்றாது! குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி! கேரள முதல்வர் அதிரடி!

யாரையும் அரசு காப்பாற்றாது! குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி! கேரள முதல்வர் அதிரடி!


kerala cm talk about gold smugling case

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. 

தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி பிரிவில் பணியாற்றுபவர் என்பதால் கேரள அரசியலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

swapna

இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் பதவி விலக கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என யு.டி.எப் குழு தலைவர் பென்னி பெஹான் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை அரசு காப்பாற்ற நினைக்கிறது எனவும் பென்னி பெஹான் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு காப்பாற்றாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், தங்க கடத்தல் வழக்கில் முதலில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி முடிவுகள் வரட்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு காப்பாற்றாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.