இந்தியா

இப்படி யாருக்கும் நடக்கவே கூடாது.. காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... பதறவைக்கும் CCTV காட்சிகள்.

Summary:

காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கேரளா மாநிலம் பந்தளம் பகுதியை சேர்ந்த நசுரூதின் என்பவர் வெளிநாட்டு செல்லும் தனது மகனை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து வழியனுப்பிவிட்டு தனது மனைவி, மருமகள் ஆகியோருடன் காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவர்கள் சென்ற கார் பந்தளம் பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் அதே சாலையில் மறுபுறத்தில் வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது படுவேகத்தில் மோதியுள்ளது. இந்த கொடூர விபத்தில் காரை ஓடிவந்த நசுரூதின் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

மருமகள் சுமையா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த விபத்து நடந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தநிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Credits: https://www.polimernews.com/


Advertisement