அத்தை மீது அப்படி ஒரு காதல்! கோவிலில் தாலி கட்டிய மருமகன்! குடும்பமே கொந்தளித்த அதிர்ச்சி தருணம்!
உத்தரபிரதேசம் கௌசாம்பி மாவட்டத்தில் உறவினருக்குள் நடைபெற்ற காதல் திருமணம் சமூகத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடும்பத் தகராறு வரை சென்ற இந்த சம்பவம், போலீஸ் தலையீட்டில் சமரசமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலாக மாறிய முதல் சந்திப்பு
கௌசாம்பி மாவட்ட ஜகன்னாத்பூரைச் சேர்ந்த போலா பிரசாத்தின் மகன் கிருஷ்ண குமார் (24) ஒரு தொழிலாளி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சித்ரகூட் மாவட்டம் ராஜபூரில் உள்ள தாய்வழி பாட்டியின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கே இருந்த தனது அத்தை சஞ்சனா தேவி (23) யை சந்தித்தார். அந்த முதல்சந்திப்பிலேயே இருவருக்கும் ஈர்ப்பு உருவாகி, பின்னர் ஆழமான காதல் உறவாக வளர்ந்தது.
மொபைல் மூலம் தொடர்ந்து பேசிய இருவரும், உறவுப்பந்தத்தை மறந்து ரகசியமாகச் சந்தித்து வந்தனர். இது தெரிய வந்ததும், இரு குடும்பங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், பலமுறை நடைபெற்ற பஞ்சாயத்திலும் தீர்வு எட்டப்படவில்லை.
இதையும் படிங்க: "உன் தோஷத்திற்கு பரிகாரம் பண்ணனும்..." கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளிய போலீஸ்காரர்.!!
போலீஸ் நிலையத்தை எட்டிய காதல் பிரச்சனை
இறுதியில் இந்த விவகாரம் மொஹபத்பூர் பைன்சா காவல் நிலையம் வரை சென்றது. அங்கு காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேந்திர குமார் வர்மா இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து, குடும்பத்தினரின் கருத்தை மதித்து திருமணம் செய்யும்படி ஆலோசனை தெரிவித்தார். ஆனால் காதல் ஜோடி தங்களது முடிவில் உறுதியுடன் இருந்தனர்.
கோவிலில் நடத்தப்பட்ட திருமணம்
இதையடுத்து, மனிதாபிமான நோக்கில் நடவடிக்கை எடுத்த காவல் நிலைய பொறுப்பாளர் இரு குடும்பங்களையும் சமாதானப்படுத்தினார். அவர்களது ஒப்புதலுடன் அருகிலிருந்த கோவிலில் கிருஷ்ணா - சஞ்சனா திருமணம் நடத்தப்பட்டது. தற்போது சஞ்சனா தனது கணவர் கிருஷ்ணாவின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
அத்தை-மருமகன் உறவை மீறி நடைபெற்ற இந்த விசேஷ திருமணம் கௌசாம்பி பகுதியில் பெரும் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. சமூக நெறிமுறைகளைக் கேள்வி எழுப்பிய இந்த சம்பவம் மக்களிடையே பல்வேறு கருத்துகளுக்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க: உடலுறவில் உண்டான வினோத ஆசை! ஆளில்லாத காட்டுக்குள் 28 வயது பெண்ணுக்கு நடந்த துயர சம்பவம்! அதீத பாலியல் வெறியால் நடந்த பயங்கரம்.!