பள்ளி மாணவி மயங்கி விழுந்து மாரடைப்பால் பரிதாப மரணம்.. தேர்வறையில் நடந்த துயரம்.!

பள்ளி மாணவி மயங்கி விழுந்து மாரடைப்பால் பரிதாப மரணம்.. தேர்வறையில் நடந்த துயரம்.!karnataka-mysore-girl-died-heart-attack-in-exam-avenue

பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவி, திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் பரிதாபமாக பலியாகினர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், டி.நரசிபுரா அக்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் அனுஸ்ரீ (வயது 16). இவர் டி. நரசிபுராவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று அம்மாநிலத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்கின. 

இதனையடுத்து, அவருக்கு தேர்வு மையமாக டி. நரசிபுரா வித்யோதயா ஜூனியர் கல்லூரி இருந்துள்ளது. அங்கு வந்த மாணவி தேர்வெழுத தயாரான நிலையில், திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை மீட்ட ஆசிரியர்கள், மாணவியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

karnataka

மருத்துவமனையில் அனுஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இந்த தகவல் அறிந்த பெற்றோர் மகளின் உடலை கண்டு கதறியழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.