ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அடப்பாவமே... வாயில் வெடி வைத்து இளம் பெண் கொலை.!! கள்ளக்காதலன் வெறிச்செயல்.!!
கர்நாடக மாநிலத்தில் இளம் பெண்ணின் வாயில் டேட்டனேட்டர் வைத்து வெடிக்க செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கிருஷ்ணராஜு என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சுபாஷ் என்பவரது வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகாரளித்தார். இந்தக் கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் உடைக்கப்படவில்லை. இதனால் காவல்துறையின் சந்தேகம் வீட்டிலிருந்தவர்கள் மீது திரும்பியது. இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் காவல்துறை அழைத்து விசாரணை செய்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சுபாஷின் மனைவி தர்ஷிதாவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர்களால் தர்ஷிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில காவல்துறைக்கு கேரள போலீஸ் தகவல் கொடுத்தது.

இதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய கர்நாடக போலீசார் அம்மாநிலத்தில் உள்ள சாலிகிராமம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் முகம் வெடித்து சிதறிய நிலையில் சடலமாக தர்ஷிதாவை மீட்டனர். இது தொடர்பாக கர்நாடக போலீஸ் நடத்திய விசாரணையில் கிருஷ்ணராஜு என்ற நபர் தர்ஷிதாவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் தர்ஷிதா மற்றும் கிருஷ்ணராஜு இடையே இருந்த கள்ளத்தொடர்பு தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: விபூதி அடித்த காதலன்... தட்டி கேட்ட மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
கர்நாடக மாநிலத்திலுள்ள தாய் வீட்டிற்கு சென்ற தர்ஷிதா, தனது மகனை அங்கே விட்டுவிட்டு கேரளாவிற்கு திரும்பி தனது கணவன் வீட்டிலுள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு கிருஷ்ணராஜுவை பார்க்க சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் சாலிகிராமம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணராஜூ தான் வைத்திருந்த டெட்டனேட்டரை, தர்ஷிதா வாயில் வைத்து வெடிக்கச் செய்து அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணராஜூவை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!