ஆணோ, கணவனோ.. மனைவியின் விருப்பமின்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமே - நீதிமன்றம் அதிரடி.!



Karnataka High Court Judgement If Husband Or Man Forced to Wife Sexual Intercourse Is Rape

மனைவியின் விருப்பம் இன்றி அல்லது அவருக்கு பிடிக்காத இயற்கைக்கு மாறான உடலுறவை கணவன் என்ற பெயரில் செய்யச்சொன்னாலும் அது பலாத்காரமே என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் வசித்து வரும் பெண்மணியொருவர், தனது கணவருக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனக்கும், எனது கணவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்ததில் இருந்து அவர் என்னை பாலியல் அடிமை போல நடத்தி வருகிறார். எனக்கு விருப்பமின்றி, என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு மேற்கொள்கிறார். 

karnataka

மேலும், இயற்கைக்கு மாறான வகைகளில் உடலுறவு மேற்கொள்ளவும், ஆபாச படங்களில் வருவதை போல அபாயகரமான உடலுறவு மேற்கொள்ளவும் வற்புறுத்துகிறார். அவரால் நான் தினமும் பல துயரங்களை அனுபவித்துவிட்டேன். இதற்கு மேல் என்னால் முடியாது. அவரின் மீது கற்பழிப்பு வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

karnataka

இந்த மனுவை விசாரணை செய்த தனிநீதிபதி அமர்வு, "ஒரு ஆணோ அல்லது கணவனோ பெண்ணின் அழைத்து மனைவியின் விருப்பமின்றி எப்படியான உடலுறவு மேற்கொண்டாலும் அது கற்பழிப்பையே சாரும். திருமணம் என்பது மனைவி அல்லது பெண்னுக்கு எதிரான பாலியல் உறவை அடிமை போல நடத்துவதற்கு அல்ல. அதனை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திருமணம் ஆணின் மிருகத்தனத்தை காண்பிக்கும் உரிமம் கிடையாது. அவரின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கலாம்" என்று தெரிவித்தது.