இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. இதுதான் காரணமா?..! அதிர்ந்துபோன மணமகன் வீட்டார்..!

Summary:

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. இதுதான் காரணமா?..! அதிர்ந்துபோன மணமகன் வீட்டார்..!

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுவது போன்று மணமகள் நாடகமாடி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் திருமண மண்டபத்தில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அப்போது மந்திரங்களை ஓதிமுடித்து புரோகிதர் தாலியை மணமகன் கையில் கொடுத்த நிலையில், திடீரென மணப்பெண் மயங்கிவிழுந்தார்.

இதனைக் கண்டு பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.  அப்போது கண்விழித்த மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், அதனாலேயே நான் மயங்கியது போல நடித்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆவேசமடைந்த மணமகன் வீட்டார் திருமண நிகழ்ச்சிக்காக செலவு செய்த 5 லட்சம் ரூபாயை கொடுக்குமாறு பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மணப்பெண் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்தது. இதன் காரணமாக மணமகன் வீட்டாருக்கு 5 லட்சம் ரூபாயை கொடுக்கும் நிலைக்கு, பெண்வீட்டார் தள்ளப்பட்டுள்ளனர்.


Advertisement