பாஜக நிர்வாகி படுகொலை., பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.. அரங்கேறிய சம்பவம்.!

பாஜக நிர்வாகி படுகொலை., பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.. அரங்கேறிய சம்பவம்.!


karnataka bjp administrator murder

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக இளைஞரணி உறுப்பினர் ஆவார். இந்நிலையில், இவர் நேற்று மாலையில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். 

இருசக்கர வாகனத்தில் வந்த கும்பலானது வெறிச்செயலை அரங்கேற்றிவிட்டு சென்றது. இந்த விஷயம் தொடர்பாக பெல்லாரே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

karnataka

பாஜக நிர்வாகி மரணத்தை தொடர்ந்து, அப்பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் உட்பட பல போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.