அரசு அதிகாரி வீட்டிலேயே வெட்டிப்படுகொலை; இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சடலம்.!Karnataka Bangalore Govt Officer Killed 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரதிமா. இவர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். 

நேற்று இவரின் கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் ப்ரதிமா தனியாக இருந்துள்ளார். அவருக்கு சகோதரர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை.

karnataka

இதனால் சகோதரியின் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு ப்ரதிமா வெட்டிக்கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்ய 4 தனிப்படை அமைத்திருக்கின்றனர்.