Gen Z ஒரு 'சாக்கடை தலைமுறை'... சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரணாவத்!



kangana-ranaut-calls-gen-z-generation-gutter-sparks-con

பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத், Gen Z இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சில இளம் பெண்களை "Generation Gutter" (சாக்கடை தலைமுறை) என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, "இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் சில இளம் பெண்கள் படிப்பிலும் சிறந்து விளங்கவில்லை; பொறுப்புணர்வும் இல்லை. இல்லத்தரசிகளாக இவர்களால் இருக்க முடியாது." என்று அவர் கூறியதோடு, அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.

kangana ranaut

கங்கனாவின் இந்தக் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் அவரது கருத்துகளை பெண்களையும் இளைஞர்களையும் இழிவுபடுத்துவதாக விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: வீட்லயே இருந்துருக்கணும்! ஊரே பேசுது.... நா பேசுனத்து என்ன தப்பு! மீண்டும் திரிஷாவைப் சீண்டிய பார்த்திபன்! இணையத்தை அதிரவிடும் வீடியோ!!!

இதற்கிடையில், போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஆபாச மொழியைத்தான் விமர்சித்ததாகவும், அதனால்தான் "Generation Gutter" என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பொறுமையை இழந்த திரிஷா..! பரவும் வதந்திகளுக்கு ஆவேசமாக கொடுத்த பதிலடி..!!! இனி தான் ஆட்டமே ஆரம்பம்...!!!