அரசியல் தமிழகம் இந்தியா

மக்களுக்கு அல்வா தந்த மத்திய பட்ஜெட்! கமல்ஹாசனின் பரபரப்பு டுவிட்!

Summary:

kamalhasan talk about budjet


அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமான், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, சுமார் இரண்டரை நேரமாக உரையாற்றினார். இது வரலாற்றில் நீண்ட நேர  உரையாக அமைந்துள்ளது. 

மத்திய அமைச்சரின் பட்ஜெட் தாக்கல் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு விமர்சங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை" என விமர்சித்துள்ளார்.                     


Advertisement