இந்தியா

அதிகாலையில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்து! 6 பேர் பலி; பலர் படுகாயம்

Summary:

Jogbani-Anand Vihar Terminal Seemanchal Express derailed

ஜோக்பானி - ஆனந்த் விஹார் மார்க்கமாக செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலம் வைஷாலி அருகே இன்று அதிகாலை 3:58 மணியளவில் தடம்புரண்டது.

இந்த விபத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை பலயாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ரயில்வே துறையின் சார்பாக மீட்பு ரயில் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் உதவி வேண்டுவோர் குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 


Advertisement