ஜம்மு-காஷ்மீர் துணை ஆளுநர் பதவியை ராஜினமா செய்கிறாரா? என்ன காரணம்?

ஜம்மு-காஷ்மீர் துணை ஆளுநர் பதவியை ராஜினமா செய்கிறாரா? என்ன காரணம்?


Jammu kashmir deputy governor will resign?

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து, அம்மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் எனப் பிரிக்கப்பட்ட பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு கிரீஷ் சந்திர முர்மு, ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக  நியமிக்கப்பட்டார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மோடியின் முதன்மை செயலாளராக இருந்தார்.

லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டுவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரிஷ் சந்திரா மர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

jammu kashmir

மத்திய, மாநில அரசுகளின் வரவு,செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் மத்திய தணிக்கை குழு தலைவராக அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய தலைமை தணிக்கை குழு தலைவராக இருக்கும் ராஜீவ் மெகர்ஷி நடப்பு வாரத்தில் ஓய்வு பெற உள்ளார்.