இந்தியா உலகம்

250 கிலோ எடை கொண்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்..! கைது செய்து லாரியில் ஏற்றிச்சென்ற அதிகாரிகள்..!

Summary:

IS leader arrested 250 kg

உலகில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கப் படையினர்  சுட்டுக் கொன்றனர். இதனை அடுத்து ஈராக்கில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ் அமைப்பினரை அந்நாட்டு அரசு அடுத்தடுத்து கைது செய்து வருகிறது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள மொசூல் என்னும் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஈராக் நாட்டின் ஸ்வாட் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதனை அடுத்து வீட்டிற்குள் மறைந்திருந்த ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவரான அபு அப்துல் பாரி என்பவரை அதிரடி படையினர் கைது செய்தனர். பு அப்துல் பாரி சுமார் 250 கிலோ எடை இருந்ததால் அவரை காரில் ஏற்றிச்செல்ல முடியாமல் லாரி ஒன்றை வரவைத்து அவரை கைது செய்து லாரியில் ஏற்றி சென்றுள்ளனர்.


Advertisement