இந்தியாவில் கொரானாவிற்கு முதல் பலி? உண்மையில் நடந்தது என்ன?



Is it true corona death in india

 சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 104 நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரானா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரானா பாதித்தவர்களில் அதிகப்படியாக கேரளாவில் 12 பேரும், அதற்கடுத்து உத்தரபிரதேசத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த, 76 வயது முதியவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர், கொரோனா பாதிப்பால் தான் உயிரிழந்தாரா என்பது, இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே பொதுமக்கள் பீதியடையாமல் விழிப்புணர்வாக இருப்பது மிகவும் அவசியம். எனவே யாரும் கொரோனா பீதியை ஏற்படுத்தி பொதுமக்களை அச்சப்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில்,  கர்நாடக அரசு இதுகுறித்து வெளியிட்ட செய்தியறிக்கையில், “உயிரிழந்தவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில்தான், இன்று உயிரிழந்தார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.