இந்தியா விளையாட்டு

தெறிக்கவிடுமா சென்னை அணி..? சிஎஸ்கே விளையாடும் 14 போட்டி..! எங்கே, எப்போது.? முழு தகவல் இதோ.!

Summary:

IPL T20 CSK time table

வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியில் இருந்து தொடங்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். 

கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள நிலையில் தற்போது போட்டி நடைபெறும் அட்டவணை குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஆட்டம் வரும் 19ம் தேதி அபுதாபியில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க உள்ளது.

இறுதிப்போட்டி சென்னைக்கு ...

மேலும் சென்னை அணி பங்கேற்கும் முதல் சுற்று 14 போட்டிகள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது அதன் முழு விவரம் இதோ.

1 . செப்டம்பர் 19. சனிக்கிழமை - அபு தாபி (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை
 
2 . செப்டம்பர் 22. செவ்வாய்க்கிழமை - ஷார்ஜா (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS ராஜஸ்தான்

3 . செப்டம்பர் 25. வெள்ளிக்கிழமை - துபாய் (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ்
 
4 . அக்டோபர் 2. வெள்ளிக்கிழமை - துபாய் (இரவு 7.30 மணி)
: சென்னை சூப்பர் கிங்ஸ் VS சன்ரைசர்ஸ் ஐதராபாத்

5 . அக்டோபர் 4. ஞாயிற்றுக்கிழமை - துபாய் (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS கிங்ஸ் லெவன் பஞ்சாப்

6 . அக்டோபர் 7. புதன்கிழமை - அபு தாபி (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

7 . அக்டோபர் 10. சனிக்கிழமை - துபாய் (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 

8 . அக்டோபர் 13. செவ்வாய்க்கிழமை - துபாய் (இரவு 7.30 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் VS சன் ரைசர்ஸ் ஐதராபாத் 

9 . அக்டோபர் 17. சனிக்கிழமை - ஷார்ஜா (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி கேப்பிட்டல்ஸ்

10 . அக்டோபர் 19. திங்கட்கிழமை - அபு தாபி (இரவு 7.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் 

11 . அக்டோபர் 23. வெள்ளிக்கிழமை - ஷார்ஜா (இரவு 7.30 மணி)
: சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்

12 . அக்டோபர் 25. ஞாயிற்றுக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)

13 . அக்டோபர் 29. வியாழக்கிழமை - துபாய் (இரவு 7.30 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

14 . நவம்பர் 1. ஞாயிற்றுக்கிழம - அபு தாபி (மதியம் 3.30 மணி): சென்னை சூப்பர் கிங்ஸ் VS கிங்ஸ் லெவன் பஞ்சாப்


Advertisement