கொரோனா நேரத்திலும் பாதுகாப்பு படையினர் அதிரடி! பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

கொரோனா நேரத்திலும் பாதுகாப்பு படையினர் அதிரடி! பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!


Indian team attack terrorist

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

கொரோனாவால் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலில் இருக்கும் நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தைரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தகவல் வந்துள்ளது.

army

இதனையடுத்து  பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு நேற்றிரவு சென்றனர். பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை பணியில் இன்று காலை முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.  மேலும் தொடர்ந்து அப்பகுதியில் சண்டை நடந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.