இந்தியா உலகம்

இந்தியா- சீனாவுக்கு இடையே சண்டை வந்தால் எந்த நாடு வெற்றிபெறும் தெரியுமா..? வெளியான முக்கிய கணிப்பு மற்றும் அதற்கான காரணம்..!

Summary:

India will won if india and chaina war happen says america

இந்தியா மற்றும் சீனா இடையே போர் வந்தால் எந்த நாடு வெற்றிபெறும் என அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் கணித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள படை பலத்தை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் வந்தால் நிச்சயம் இந்தியாதான் வெற்றிபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் சில முக்கிய கரணங்கள் இதோ.

1. இரண்டு நாட்டு தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிடும்போது இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் உள்ளது. ஆனால் இரண்டு நாட்டு எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை கணக்கிட்டால் இந்திய வீரர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

2. சீனாவை பொறுத்தவரை இந்திய எல்லை பகுதியில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம் தான். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மொத்தம் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடினமான மலை பகுதிகளில் போரிடும் திறன் கொண்டவர்கள்.

3. சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன.

4. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன.

5. இந்தியாவின் மிக சிறந்த ஏவுகணையாக கருதப்படும் அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் இந்திய ராணுவத்தால் தாக்க முடியும். மேலும் அக்னி-2 ஏவுகணைகள் மூலம் இந்தியாவால் மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்க முடியும்.

6. அதேபோல் 51 அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக அழித்து விடும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

7. இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சீனா தனது முழு படையையும் இந்திய எல்லையில் திரட்டவேண்டும். இது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் இந்தியாவிற்கு இது மிகவும் எளிதான ஒன்று. ஏனென்றால் இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் உள்ளது.

இதனால் இந்தியா - சீனா இடையே போர் வந்தால் இந்தியா வெற்றிபெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


Advertisement