இந்தியா

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவின் தற்போதைய நிலை என்ன? மத்திய அரசு அறிவிப்பு!

Summary:

India status in corona

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸால் நாள்தோறும் பலி எண்ணிக்கையும், கொரோனா தொற்று பரவுவதும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பரவல்  3-வது நிலையான சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்குச் சென்று விட்டதாக பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இவற்றை மறுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவல், சமூக பரிமாற்றத்திற்கு இன்னும் செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது, அதாவது இரண்டாவது நிலையில் தான் உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

கொரோனவை தடுக்க இந்தியாவில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது, கொரோனா பரவுவதை சற்று தடுக்க முடிந்தது. இந்திய மக்களும் சுகாதாரத் துறையின் அறிவிப்பை பின்பற்றினால் இந்தியாவிலிருந்து முற்றிலும் கொரோனாவை ஒழிக்க முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.


Advertisement