ஐ.நா சபையில் ரஷியாவுக்கு எதிராக இந்தியா செயல்படாதது ஏன்?.. அசரவைக்கும் உண்மை தகவல்..! 

ஐ.நா சபையில் ரஷியாவுக்கு எதிராக இந்தியா செயல்படாதது ஏன்?.. அசரவைக்கும் உண்மை தகவல்..! 


india-russia-is-a-biggest-ever-friendship

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்றுள்ளதை எதிர்த்து உலக நாடுகளே கொந்தளித்து இருக்கிறது. ஐ.நா சபையில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அதன் நட்பு நாடுகள் கொண்டு வருகையில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறியது. ஐ.நா தீர்மானத்தை 11 நாடுகள் வரவேற்ற நிலையில், வீட்டோ அதிகாரத்தை கொண்டு ரஷியா முறியடித்தது. இந்த விஷயத்திற்கு இந்தியாவிலேயே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. 

உக்ரைன் - ரஷியா போர் விவகாரத்தில், ரஷியா சோவியத் யூனியனை மீண்டும் இணைக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டினாலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் நேட்டோ படைகளோடு உக்ரைனை இணைக்க ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிராந்திய அளவிலான பாதுகாப்பை உறுதி செய்ய, உக்ரைனை தன்னுடன் இணைப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்ற எண்ணத்தில் போர்தொடுத்து செல்வதாக ரஷியா தெரிவித்துள்ளது.

India

மேலும், இந்த விவகாரத்தில் உக்ரைன் படைகளுக்கு ஆதரவாக போர்க்களத்திற்கு பிற நாடுகள் வருகை தந்தால் வரலாற்றில் பதிவு செய்யப்படாத பேரழிவை தந்துவிடுவேன் என்றும் ரஷியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட மேலை நாடுகளின் படைகள் ஐரோப்பிய நாடுகள் - உக்ரைன் எல்லையில் முகாமிட்டு இருக்கிறது. அந்நாட்டில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த வாக்கெடுப்பில் இந்தியா ஏன் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்று பலரும் கேட்டு வருகின்றனர். அதற்கு சமூக வலைத்தளத்தில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவது,

1) இந்தியா நேருவின் காலத்தில் இருந்தே, தற்போது வரை அணி சேரா நாடாக இருந்து வருகிறது.

2) இந்தியாவிடம் இன்று நட்பு பாராட்டும் அமெரிக்கா, கடந்த 1971 ஆம் வருடம் பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு தனது போர்க்கப்பலை இந்தியாவுக்கு எதிராக நிலைநிறுத்தியது. 

3) அந்த சமயத்தில் இந்தியாவின் நிலை என்னவாகும் என உலக நாடுகள் அஞ்சியபோது, இந்தியாவிற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவை எதிர்த்து போரிட தனது கப்பலை அனுப்பிய ஒரே நாடு ரஷியா மட்டும் தான். 

4) அன்று ரஷியா இந்தியாவிற்கு ஆதரவாக இல்லாமல் சென்றிருந்தால், யுத்தத்தில் அமெரிக்கா வீசும் குண்டால் இந்தியா என்ற நாடு எப்படி சிதைந்திருக்கும் என்பது தெரியாது. இது நிதர்சனம்.

5) உலகத்தின் வலிமையான இராணுவத்தில் இந்தியா நான்காவது இடம் பெற்றுள்ளது என்றால், அதற்கு மிகப்பெரிய காரணம் ரஷ்யா மட்டுமே. 

India6) இந்தியா பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, உலக நாடுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் பொருளாதார தடையை விதித்தது. இந்தியாவை உலக நாடுகள் தனிமைப்படுத்திவிட, அப்போதும் நண்பனாக உதவிக்கரம் நீட்டிய ஒரே நாடு ரஷியா. 

7) "வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது, கொடுப்பவர் அதனை சொல்லிகாண்பிப்பதில்லை" என்ற தமிழ் பழமொழிகளுக்கு ஏற்றாற்போல, இந்தியாவிற்கு மிகவும் இக்கட்டான தருணங்களில் உதவி செய்த ரஷியா, அதனை என்றுமே சொல்லி காண்பித்தது இல்லை. 

8) இந்தியாவுக்கு நான் செய்த சீர்கள் இவ்வுளவு. அதனால் ஐ.நா சபையில் எனக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என, அமெரிக்கா போல ரஷியா இந்தியாவை எந்த சூழலிலும் நிர்பந்தித்தது இல்லை. 

9) இந்தியாவின் அணிசேரா கொள்கையில் எந்த சூழலிலும் நான் (ரஷ்யா) தலையிட மாட்டேன். இந்தியா எனது உற்ற நண்பன் என்று தான் இன்றுவரை ரஷியா சொல்கிறது. அதுவே அந்நாட்டின் பெருந்தன்மை. 

புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால், கடந்த கொரோனா பரவலின் போது மலேரியா நோயை கட்டுப்படுத்தும் மருந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று ட்ரம்ப் இந்தியாவின் மீது பொருளாதார தடையை விதிப்போம் என மிரட்டி மருந்துகளை பெற பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.