இந்தியா

பஞ்சாப் மற்றும் பெங்களூரில் கொரோனா.! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44 ஆக உயர்வு.!

Summary:

India 44 corono cases confirmed

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை 3500 கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனோவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 34 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, கேரளாவில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 39 ஆக உயர்ந்தது. தமிழகத்திலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமையில் தனி வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிச்சை பெற்றுவருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


Advertisement