கொடுமை! பெயர் குழப்பத்தால் சிறைத் தண்டனை அனுபவித்த அப்பாவி மூதாட்டி; எத்தனை வருடம் தெரியுமா?

கொடுமை! பெயர் குழப்பத்தால் சிறைத் தண்டனை அனுபவித்த அப்பாவி மூதாட்டி; எத்தனை வருடம் தெரியுமா?


india - assam - wrong arrest - old women

அசாம் மாநிலத்தில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் குறிப்பாக பங்களாதேசை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்றும் கூறப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் தேசிய மக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் விடுபட்டும் நிராகரிக்கப்படும் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டன.

மேலும், இதில் சந்தேகப்படும்படியான சிலர் 1971 ஆம் ஆண்டிற்குப் முன்னதாகவே இம்மாநிலத்தில் குடி இருக்கிறார்களா என்பது தொடர்பான விசாரணைக்காக வெளிநாட்டு தீர்ப்பாயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இவர்களது விசாரணையின்போது பங்களாதேசை சேர்ந்த மதுபாலா தாஸ் என்பவர் சிராங் மாவட்டத்தில் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

India

ஆனால் மதுபாலா தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதால் அப்பகுதியில் வசித்து வந்த மதுபாலா மொண்டல் என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யும்போது அந்த மூதாட்டி எவ்வளவோ கெஞ்சியும் விசாரணை அதிகாரிகள் அவரை விடவில்லை. இத்தனைக்கும் மாற்றுத்திறனாளியான அவரது மகளுக்கு இருந்த ஒரே ஆதரவு மொண்டல் என்பதுதான் வேதனைக்குரியது.

இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அவர் விடுதலையாகி வெளியே வருவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது தான் பெரும் சோகம். இவருடைய இந்த கஷ்டத்திற்கு விசாரணை அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று மக்கள் பலரும் கொந்தளிக்கின்றனர்.