கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை.. ஓடும் ரயிலில் கொடூரம்..! 



in West Bengal a Pregnant Lady Raped in Train While She Travelling Alone

ரயில் பெட்டியில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. 

கர்ப்பிணி பெண்: 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள அலிபுரத்துவார் மாவட்டம், கால்சினி பகுதியில் வசித்து வரும் 20 வயதுடைய இளம்பெண் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளார். மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்தார். 

இதையும் படிங்க: அய்யோ... கடவுளே! மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்! இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!!

ஆட்கள் இல்லை: 

இந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத நிலையில், பயணம் செய்த சிலரும் வழியில் இறங்கி இருக்கின்றனர். ஒருகட்டத்தில் பெட்டி காலியாக இருந்த நிலையில், அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார். இவர் அசாம் மாநிலத்தின் ராங்கியா நகரை சேர்ந்தவர் ஆவார். 

Crime news

பாலியல் வன்கொடுமை: 

இந்த ரயில் கால்சினி நகரை நெருங்கி வந்தபோது, கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருக்கிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட ரயில்வே ஊழியர்கள், பக்கத்து பெட்டியில் இருந்ததால் உடனடியாக உதவவும் முடியவில்லை. மேலும், ரயில்வே உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 

கைது: 

தொடர்ந்து, அலிபுரத்துவார் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த காவல் துறையினர், ரயில் வந்ததும் உடனடியாக பெண்ணை மீட்டனர். மேலும், பெண்ணும் கணவரை தொடர்புகொண்டு விபரத்தை தெரிவிக்கவே, அவரும் ரயில் நிலையம் வந்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திலேயே இளைஞரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த கவுதம் என்பது தெரியவந்தது. 
 

இதையும் படிங்க: 16 வயது சிறுமி சித்ரவதை & கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. அசாமில் படுபயங்கரம்..!