16 வயது சிறுமி சித்ரவதை & கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. அசாமில் படுபயங்கரம்..!
சிறுமியை சித்ரவதை செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சடலமாக மீட்பு:
அசாம் மாநிலத்தில் உள்ள ஹேலாக்கண்டி மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 01 ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததற்கான ஆதாரங்கள் இருந்ததால், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 4 மாத கர்ப்பிணி மகளை ஆற்றில் தள்ளிவிட்டுக்கொன்ற தந்தை.. திடுக்கிடவைக்கும் காரணம்.. பதறவைக்கும் சோகம்.!
விசாரணை:
பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த 6 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, நேற்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

அதிர்ச்சி தகவல்:
அதாவது, சிறுமிக்கு நன்கு தெரிந்த கொடூரர்கள், சிறுமியை அழைத்துச்சென்று கூட்டாக வன்கொடுமை செய்து கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். சிறுமியை வன்கொடுமை செய்தபின், அவரை கடுமையாக துன்புறுத்தி இருக்கின்றனர். சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்பு ராடு திணித்து, சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்பது அம்பலமானது. இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்காக மனைவி கொலை.. ஹாலிவுட் சீரிஸ் பார்த்து அரங்கேறிய சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.!