பதறவைக்கும் காட்சிகள்.. சேர்க்கைக்கு முறுக்கிய மாடு.. முதியவர் நெஞ்சில் ஏறிபாய்ந்து ஓட்டம்... பரிதாபம் மரணம்.!



in Uttar Pradesh Lakhimpur Man Died 

 

தெருவில் சுற்றித்திரிந்த மாடு ஏறி மிதித்ததில் முதியவர் பலியான சோகம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி, ராஜ்புர், நவீன் சபிஜி பகுதியில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. சந்தையில் மீதமுள்ள காய்கறிகளை சாப்பிட, அங்கு தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் அங்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணமான 5 நாளில் புதுமணப்பெண் மாயம்.. டீயில் தூக்க மருந்து கலந்துகொடுத்து நகை, பணத்துடன் ஓட்டம்.!

இந்நிலையில், இன்று சுமார் நண்பகல் 12 மணியளவில், மாடுகள் அங்கு கூட்டமாக இருந்தது. அருகில் சிறிய அளவிலான காய்கறி கடைகள் இருந்தன. அப்போது, ஒரு மாடு இன சேர்க்கைக்கு முற்பட்டபோது. இதனால் மிரண்டுபோன மாடு பதறி ஓடியது.

Uttar pradesh

முதியவர் மரணம்

இதில் நாற்காலி கொண்டு அமர்ந்து இருந்த முதியவரின் நெஞ்சு பகுதியில் மாடு மிதித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தில், முதியவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: திருமணமான மறுநாளே குழந்தை பிறந்த அதிசயம்.. உறவினர்களுக்கு பேரதிர்ச்சி.!