உ.பி: பாம்பை கடித்துக் கொன்ற 3 வயது சிறுவன்... மருத்துவர்கள் அதிர்ச்சி.!

உ.பி: பாம்பை கடித்துக் கொன்ற 3 வயது சிறுவன்... மருத்துவர்கள் அதிர்ச்சி.!


in-uttar-pradesh-a-3-year-old-boy-chew-the-snake-to-dea

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவன் பாம்பை கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டான்.

உத்திர பிரதேச மாநிலம் ஃபாரூக்காபாத் பகுதியைச் சார்ந்த  மூன்று வயது சிறுவன் ஒருவன்  விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக வந்த பாம்பு ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்றிருக்கிறான். இதனால் சிறுவனின் வாயில் மாட்டிய பாம்பு இறந்திருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

UttarPradesh

இறந்த பாம்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் சென்று  பாம்பை பார்த்த டாக்டர்கள் அது விஷம் இல்லாத பாம்பு என்பதால் சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவித்தனர். மேலும் சிறுவன் வாயில் போட்டு கடித்ததால் அந்த பாம்பும் இறந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுவன் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். மூன்று வயது சிறுவன் பாம்பை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.