திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றபோது சோகம்; உடல் கருகி புதுமாப்பிள்ளை பலி.!



 in New Delhi Kasipur Highway Man Died 

புதுடெல்லியில் உள்ள நவாடா பகுதியில் வசித்து வருபவர் அணில். இவருக்கு வரும் பிப்ரவரி மாதம் 14 ம் தேதி திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதனால் உற்றார்-உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை வைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதனிடையே, அணில் டெல்லி ௦ மீரட் விரைவு சாலையில், காரில் சென்றுள்ளர். 

death

கார் தீப்பிடித்து சோகம்

உறவினர்களுக்கு பத்திரிகை வைக்கச் சென்றபோது கார் தீப்பிடித்து விபத்திற்குள்ளா நிலையில், அவர் வாகனத்தில் இருந்து வெளியேற இயலாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: மரக்கட்டையை இறக்கும்போது சோகம்; உடல் நசுங்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி.!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காசிப்பூர் காவல்துறையினர், அணிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்பசுற்றுலா இறுதிச்சுற்றுலாவான சோகம்.. கோவா விரும்பிகளே, பாராகிளைடிங் உஷார்.!