தமிழகத்தில் ஆட்சி மாற அந்த அம்மா தான் காரணம்..! CM போட்டோ பக்கத்துல த்ரிஷா போட்டோவையும் வைங்க..! கவுன்சிலரின் கலாட்டா வீடியோ..!!!



karaikudi-corporation-meeting-trisha-photo-controversy

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் புகைப்பட விவகாரம் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர்களின் புகைப்படங்களை வைப்பது குறித்து உறுப்பினர்கள் இடையே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்று கூறியதால் கூட்ட அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

முதல்வர்கள் புகைப்படம் குறித்து வாக்குவாதம்

நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அதிமுக கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களும் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: விஜய் மேட்சிங் ட்ரெஸ் வாங்கி கொடுத்தாலும் த்ரிஷா போட்டுட்டு வீட்ல இருந்துருக்கலாம்! நா பேசுனது 3 வது மனுஷிய பத்தி....வீடியோ வெளியானதும் மிரட்டல் போன் கால்! நடிகர் பார்த்திபன் பரபரப்பு வீடியோ!

சுயேட்சை கவுன்சிலரின் திடீர் கருத்து

இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியபோது, சுயேட்சை கவுன்சிலரான மெய்யர் திடீரென நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்று கூறினார். கடந்த தேர்தலில் த்ரிஷாவால்தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்றும், அவரது புகைப்படத்தை வைக்காவிட்டால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்ட அரங்கில் சிரிப்பலை

சுயேட்சை கவுன்சிலரின் இந்தக் கருத்தைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த உறுப்பினர்கள் சிரிக்கத் தொடங்கினர். அதன்பின், த்ரிஷாவின் புகைப்படத்தை மாட்டுவதற்கு தற்போதைய இடத்தில் வசதி இல்லை, அதற்கென தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் நகைச்சுவையாக பேசியதால், கூட்டத்தில் சில நிமிடங்கள் கலகலப்பான சூழல் நிலவியது.

 

இதையும் படிங்க: எங்களுக்கும் நக்கல், நய்யாண்டி, குட்டிக் கதை எல்லாம் தெரியும்... திமுகவை தனது ஸ்டைலில் சீண்டிய CM விஜய்! விழுந்து விழுந்து சிரித்த எடப்பாடி..... செம டிரெண்டிங் வீடியோ வைரல்..!!!