இன்பசுற்றுலா இறுதிச்சுற்றுலாவான சோகம்.. கோவா விரும்பிகளே, பாராகிளைடிங் உஷார்.!

சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கோவாவில், பல்வேறு விதமான சாகசங்களும் மேற்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெரும் பொருட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் பாராகிளைடிங் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவைச் சேர்ந்த 27 வயது பெண்மணியான ஷிவானி டாப்லெ, சம்பவத்தன்று கோவாவில் உள்ள குரியம் பகுதியில் மாலை சுமார் 04:30 மணிக்கு மேல் பாராகிளைடிங் மேற்கொண்டார்.
இருவரும் மரணம்
இவரின் பயிற்சியாளராக நேபாளம் நாட்டைச் சேர்ந்த சுமன் நேபாளி என்பவர் வந்திருந்தார். இருவரும் பாராகிளைடிங் செய்தபோது, எதிர்பாராத விதமாக நடுவானில் கயிறு அறுந்துள்ளது.
இதையும் படிங்க: கணவர் உயிரிழந்த சிலமணிநேரத்தில் மாரடைப்பால் மனைவி பலி; குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!
அப்போது, இருவரும் பாறைகள் அதிகம் உள்ள இடத்தில் மோதி, உடலில் படுகாயத்தை சந்தித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வசிக்காரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்ததால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; பதறவைக்கும் காட்சிகள்.!