மரக்கட்டையை இறக்கும்போது சோகம்; உடல் நசுங்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி.!



in Kerala Malappuram Man Dies Timber Fall 

 

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம், துவூர் பகுதியில் மர அறுவை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று லாரியில் மரங்கள் வந்து இறக்கப்பட்டது. 

நிகழ்விடத்திலேயே பலி

அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த சம்சுதீன் (வயது 54) என்ற தொழிலாளியின் மீது மரங்கள் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் உடல் நசுங்கி சம்சுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இதையும் படிங்க: கணவர் உயிரிழந்த சிலமணிநேரத்தில் மாரடைப்பால் மனைவி பலி; குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!

சிசிடிவி காட்சிகள் வெளியானது

இந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்சுதீனின் உடலில் மரக்கட்டைகள் விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதன் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்ததால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; பதறவைக்கும் காட்சிகள்.!